Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol Namepaddy-dhans-nursery-tamil
CropPaddy
Protocol TypeConventional
AuthorDhandapani Murugesan
NotesDhans KB



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -12 (+/- 2) 1.0 நாற்றங்கால் நில அளவு:
ஒரு ஏக்கர் நடவு செய்ய 10 சென்ட் அளவிலான நாற்றங்கால் தேவை. இப்படி கணக்கிட்டு வரும் அளவை விட சற்று அதிகமான இடத்தில் உழவு செய்யவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -12 (+/- 2) 2.0 உழுதல் / நிலம் தயாரிப்பு :
நிலத்தை பவர் ட்ராக்டர் கொண்டு நன்கு உழவும். முடியும் பட்சத்தில் பசுந்தாள் உரம் இட்டு மேழுலவு செய்யவும்.
Notes: .
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation -3 (+/- 1) 1.0 நாற்றங்கால் அமைத்தல்:
30 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் அகலமும் 15 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட உயர் பாத்தி ஒன்றை அமைக்கவும். அதன் மேலாக மக்கிய தொழு உரத்தை தூவி மேலாக கிளறி விடவும்.
Notes: 10 மீட்டர் , 1.5 மீட்டர் அளவுள்ள ஒரு பாத்திக்கு 1 கிலோ விதை தேவை. இது சன்ன ரக அல்லது புதிய ரக பயிராக இருந்தால் 1.25 கிலோ விதை பயன்படுத்தவும்.
Supplies:
1 FYM
100.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Preparation -2 (+/- 0) 1.0 விதைகளை ஊறவைத்தல் - 1:
விதைகளை ஒரு சணல் சாக்கு பையில் போட்டு கட்டவும். அஸோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஷுடோமோனாஸ் மற்றும் பஞ்சகாவியா உடன் தேவையான அளவு நீர் கலந்து நுண்ணுயிர் நீர் தயாரிக்கவும். அதில் சாக்கு மூட்டையை முழுக்க முழுகுமாறு முக்கி இன்று இரவு முழுவதும் ஊறவைக்கவும் (குறைந்தது 12+ மணி நேரங்கள்). முக்கியமாக ரசாயன இடுபொருட்கள் எதுவும் இந்நிலையில் சேர்க்க வேண்டாம். ரசாயன இடுபொருட்கள் நுண்ணுயிர் நீரின் செயல்பாட்டை வெகுவாக குறைத்துவிடும்.
Notes:
Supplies:
1 Seed
30.00
Kg / acre
e -
2 Water
50.00
Litre / acre
e -
3 Azospirillum
500.00
gram / acre
e -
4 Phosphobacteria
500.00
gram / acre
e -
5 Pseudomonas fluorescens
500.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Preparation -1 (+/- 0) 1.0 விதைகளை உலர்த்துதல்:
காலையில் எழுந்தவுடன் முந்திய இரவு முழுதும் ஊறிய விதை மூட்டையை தூக்கி நுண்ணுயிர் நீரை வடித்துவிட்டு நிழலில் சுமார் 6 மணி நேரத்திற்கு காயவைக்கவும் (காலை முதல் மாலை வரை). விதைகளை சாக்கிலிருந்து வெளியே எடுக்க வேண்டாம். மூட்டையை நிழலில் உலர வைப்பது முக்கியம். இந்த ஊறிய நுண்ணுயிர் நீரை கீழே ஊற்றாமல் பாதுகாப்பாக நிழலிலேயே வைக்கவும். அது இரண்டாவது ஊறவைத்தலுக்கு தேவைப்படும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Preparation -1 (+/- 0) 2.0 விதைகளை ஊறவைத்தல் - 2:
6 மணி நேரம் (மாலை வரை) நிழலில் உலர்ந்த விதை மூட்டையை மீண்டும் அதே நுண்ணுயிர் நீரில் முக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இது விதை முளைப்பு திறனை அதிகரிக்க உதவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Preparation -1 (+/- 0) 3.0 விதைகளை முளைகட்டுதல்:
ஒருமணி நேரம் இரண்டாவது முறையாக ஊறிய விதை மூட்டையை தூக்கி நுண்ணுயிர் நீரை வடித்துவிட்டு நிழலில் உலர வைக்கவும். விதைகளை மறுநாள் காலை வரை அல்லது விதைக்கும் வரை முளைக்க வைக்கவும். இந்த நிலையில் நாற்றங்கால் மற்றும் மேட்டுப்பாத்தி முழு தயார் நிலையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். விதைத்த பின் மேட்டு பாத்தியை மூடி வைக்க தென்னைமட்டைகளையோ வைக்கோலையோ தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். விதைகள் ஊறிய நுண்ணுயிர் நீரை கீழே கொட்டாமல் பாதுகாத்து வைக்கவும், இதை நாற்றங்காலில் தெளிக்க பயன்படுத்தலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Preparation 1 (+/- 0) 1.0 விதை முளைப்பை கவனித்தல் :
இன்று காலையில் விதை நெல்லின் முளைப்பு தெரிய ஆரம்பிக்கும். சிறிய வெள்ளை நிற வேர் வந்திருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும். நெல்லின் ரகத்தை பொறுத்து வேர் நீளமாகவே குறுகியதாகவோ இருக்கும். இந்த முளை விட்ட விதைகள் விதைப்புக்கு தயார்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Preparation 1 (+/- 0) 5.0 ஜிங்க் உரமிடுதல்:
ஜின்க் ஈ. டி. டி. ஏ (Zn EDTA) மற்றும் ஜின்க் சல்பட்டை (Zn Sulphate) மக்கிய தொழு உரத்துடன் கலந்து மேட்டு பாத்தி மீது தெளிக்கவும். விதை ஊறவைத்த நுண்ணுயிர் நீரை மேட்டு பாத்தி மீது தெளிக்கவும்.
Notes: Zinc sulphate and Zinc EDTA addresses the Zn requirement at different life stages of the seedling
Supplies:
1 Zinc EDTA
100.00
gram / acre
e -
2 Zinc Sulphate
1.00
Kg / acre
e -
3 FYM
10.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Sowing 1 (+/- 0) 6.0 விதைப்பு:
முளைவிட்ட விதைகளை மேட்டுப்பாத்தி மீது தூவவும். 30 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் உள்ள பாத்திக்கு 3 லிருந்து 3.5 கிலோ விதைகள் தேவை. இது ஏறத்தாழ 1 சென்ட் நிலத்துக்கு சமம். விதைகளை ஆழமாக புதைக்கவேண்டாம். லேசாக மண்ணை விரலால் கிளறிவிட்டாலே போதும். விதைகளை மெல்லியதாக மூடும்படி மண் இருந்தால் போதுமானது.
Notes: 10 மீட்டர் , 1.5 மீட்டர் அளவுள்ள ஒரு பாத்திக்கு 1 கிலோ விதை தேவை. இது சன்ன ரக அல்லது புதிய ரக பயிராக இருந்தால் 1.25 கிலோ விதை பயன்படுத்தவும்.
Supplies:
1 Seed
3.50
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Sowing 1 (+/- 0) 7.0 மல்ச்சிங்:
வைக்கோலையோ காய்ந்த தென்னை மட்டைகளையோ போட்டு விதைக்கப்பட்ட பாத்திகளை மூடி விடவும். முக்கியமாக பகல் பொழுது முழுதும் மூடியே வைக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Sowing 1 (+/- 0) 8.0 நீர் பாய்ச்சுதல் :
பாத்திகளுக்கு பூவாளி மூலமாக கொஞ்சமாக, பாத்திக்கு மிக அருகில் தனிவாக இருந்து தண்ணீர் தெளிக்கவும். விதைகள் தெறித்து மண்ணின் மேல்பக்கத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ளவும். மேலே மூடிக்கிடக்கும் வைக்கோல் மீதே தண்ணீர் தெளிக்கலாம். முழுப்பாத்தியும் நன்கு நனையுமாறு பார்த்துக்கொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
13 Crop growing 2 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
பாத்திகளுக்கு பூவாளி மூலமாக கொஞ்சமாக, பாத்திக்கு மிக அருகில் தனிவாக இருந்து தண்ணீர் தெளிக்கவும். விதைகள் தெறித்து மண்ணின் மேல்பக்கத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ளவும். மேலே மூடிக்கிடக்கும் வைக்கோல் மீதே தண்ணீர் தெளிக்கலாம். முழுப்பாத்தியும் நன்கு நனையுமாறு பார்த்துக்கொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
14 Crop growing 3 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் :
பாத்தி காய்ந்து போய் இருந்தால் மீண்டும் பூவாளி வழியாக தண்ணீர் விடவும். மேலே மூடிக்கிடக்கும் வைக்கோல் மீதே தண்ணீர் தெளிக்கலாம். முழுப்பாத்தியும் நன்கு நனையுமாறு பார்த்துக்கொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
15 Crop growing 4 (+/- 1) 1.0 விதை முளைப்பை கவனித்தல் :
இன்று விதைகள் முளைத்து முதல் விதையிலை பாத்திக்கு வெளியில் எட்டிப் பார்க்கும். முதல் வேர் நன்கு வளர்ந்து கீழே செல்லும். இனி பூவாளி வழியாக தண்ணீர் பாய்ச்ச தேவை இல்லை. பாத்தியை மேலும் மூடிவைக்க தேவையில்லை. மேட்டுப்பாத்தியை சுற்றி உள்ள வாய்க்கால் வழியாக முழு பாத்தியும் நனையும் படி தண்ணீர் விடவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
16 Crop growing 7 (+/- 2) 1.0 வளர்ச்சியை கண்காணித்தல் - முதல் இலை :
ஐந்து முதல் ஏழு நாட்களில் முதல் உண்மையான இலை வெளிவர ஆரம்பிக்கும். நெல்லின் ரகத்தை பொறுத்து இது 5 லிருந்து 7 நாட்களுக்குள் இது நிகழ வேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
17 Crop growing 7 (+/- 2) 2.0 நோய் பூச்சி கண்காணிப்பு:
தண்டு துளைப்பனும், இலை கருகலும் தாக்கும் நேரம். கவனம் தேவை. நாற்றங்காலை தினம் ஒருமுறை சுற்றி வந்து பூச்சிகளோ, முட்டையோ இருக்கின்றதா என்றும் அவை தாக்கியதற்கான அறிகுறிகள் இருக்கிறதா எனவும் பார்க்கவும். இதை கண்டுபிடிக்க எதுவாக கீழே சில படங்கள் தரப்பட்டுள்ளது.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
18 Crop growing 10 (+/- 2) 1.0 வேர் அழுகல் நோய்:
வேர் அழுகல் நோய் வருவதற்க்கு வாய்ப்புள்ள நேரம். கவனம் தேவை. மண் மட்டத்திற்கு மேலாக நாற்று வெளுத்தோ அல்லது பிரௌன் நிறத்திலோ இருக்கிறதா என்று பார்க்கவும். சிலபோது இது கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கலாம். தீவிரமான நோய் தாக்குதல் இருந்தால் நாற்றுக்கள் குட்டையாகவும் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பாதிக்கப்பட்ட நாற்றுகளின் வேர்களிலும் தண்டிலும் பூஞ்சை வளர்ந்திருக்க வாய்ய்புள்ளது. கவனமாக பரிசோதிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
19 Crop growing 12 (+/- 2) 2.0 நோய் பூச்சி கண்காணிப்பு:
தண்டு துளைப்பனும், இலை கருகலும் தாக்கும் நேரம். கவனம் தேவை. நாற்றங்காலை தினம் ஒருமுறை சுற்றி வந்து பூச்சிகளோ, முட்டையோ இருக்கின்றதா என்றும் அவை தாக்கியதற்கான அறிகுறிகள் இருக்கிறதா எனவும் பார்க்கவும். இதை கண்டுபிடிக்க எதுவாக கீழே சில படங்கள் தரப்பட்டுள்ளது.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
20 Harvesting 15 (+/- 2) 1.0 இரண்டாவது இலை உயரம் கவனித்தல்:
இந்நேரம் இரண்டாவது இலை 10 லிருந்து 15 சென்டி மீட்டர் உயரம் வந்திருக்க வேண்டும். வெளிப்பக்க இலைகளை மெல்ல விரித்து பார்த்தால் முன் தூர் வந்திருப்பது தெரியும். ஒருவேளை இரண்டாவது, மூணாவது இலைகள் 10-15 cm இல்லவாவிட்டால் இன்னும் சில நாள் நாற்றை வளர விடலாம். ஆனால் விதைத்து 21 நாட்களுக்குள் நடவு செய்து விடுதல் நல்லது. நாற்றின் வேரை கண்காணிப்பதும் மிக அவசியம். சிறிய, பால் வெள்ளை நிற வேர்கள் நடவுக்கு சிறந்து. இந்த சிறிய, உறுதியான வேர்கள் நாற்றை பிடுங்கி நடுவதின் பாதிப்பை வெகுவாக குறைக்கும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
21 Harvesting 15 (+/- 2) 2.0 நாற்று பிடுங்குதல்:
நாற்றுகளை மெதுவாக பிடுங்கி கட்டுகளாக கட்டி வேர்கள் நீரிலேயே இருக்கும்படி வைக்கவும். பிடுங்கப்பட்ட நாற்றுகளை நிழலிலேயே வைத்திருப்பது பிடுங்கி-நடுவதின் பாதிப்பை குறைக்க உதவும். நாற்றை பிடுங்கும் பொழுது அதன் வேர்கள் சேதாரமாகாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
22 Harvesting 15 (+/- 2) 3.0 நுண்ணுயிர் டிரீட்மென்ட் :
பிடுங்கப்பட்ட நாற்றுகளை நுண்ணுயிர் கலவையில் வேர் நனைய வைத்திருப்பது பயிர் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர வழிவகுக்கும். அஸோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஷுடோமோனாஸ் உடன் தேவையான அளவு நீர் கலந்து நுண்ணுயிர் கலவையை தயாரிக்கலாம். இதில் வேர்களை 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை நனைத்து வைக்கவும்.
Notes: நாற்றுகளை எல்லா நேரமும் நிழலிலேயே வைத்திருக்கவும். பிடுங்கி நடுவதின் பாதிப்பை இது வெகுவாக குறைத்து நோய் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.
Supplies:
1 Azospirillum
500.00
gram / acre
e -
2 Phosphobacteria
500.00
gram / acre
e -
3 Pseudomonas fluorescens
500.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre